துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் தாய் கோயில்

தாய் கோயில், துறையூர்


Thuraiyur Thai Kovil


துறையூர் – ஆத்தூர் சாலையில், தனது தாயின் மீது கொண்ட அன்பினால் அவருக்கு கோவில் கட்டியுள்ளார் துறையூரைச் சேர்ந்த சி.சுரேஷ்குமார். இவரது தாய் தனபாக்கியம் இவர் கடந்த 2007 ம் ஆண்டு உயிரிழந்தார். தாயின் மீது அளவு கடந்த அன்பை செலுத்தி வந்த இவர். தனது தாய்க்காக கோவில் கட்டவேண்டுமென்று கருதினார். தனது கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அவர் துறையூர்-ஆத்தூர் சாலையில் உள்ள இடுகாடு அருகே 2.75 ஏக்கர் பரப்பளவில் தனது தாய்க்காக கோவில் எழுப்பியுள்ளார்.

இந்த கோவிலில் தேசிய விருது பெற்ற கும்பகோணம் ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்ட சுமார் நான்கு அடி உயரமுள்ள தன் தாயின் வெண்கலச் சிலையை வைத்துள்ளார். தாயின் சிலையின் முன்பு தனது தாய் பூமியில் வாழ்ந்த 64 ஆண்டுகளை குறிக்கும் விதமாக 64 அடி உயர கிரானைட் கல் தூணும், அதன் மீது தாய் தனது குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற சிலையும் வைத்துலல்ர். தாய் சிலை பீடத்துக்கு கீழே மிகப்பெரிய மீன் தொட்டி கட்டி அதை அனைவரும் காணும் விதமாக தாயின் கோவிலைச் சுற்றி நடைமேடையும், பூங்காவையும் நிறுவியுள்ளார்.
இந்த கோவிலின் உள்பகுதியில் தியான மண்டபம் உள்ளது.அனைத்து மதத்தினரும் விழாக்கள் நடத்தவும், அன்னதானம் செய்யவும் இடம் இலவசமாக அளிக்கப்படும். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், ஓய்வுக்காக அமர கல்லால் ஆன இருக்கைகளும், அவர்கள் வாசிக்க அனைத்து செய்தித்தாள்களும் வாங்கி வைக்கப்படுகிறது.
“மாற்றுத்திறனாலிகளே தங்கள் தாயை போற்றுகிறபோது என்னை குறையின்றி இவ்வுலகுக்கு கொண்டு வந்த எனது தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த கோவிலை கட்டியிருக்கிறேன் என்கிறார் சுரேஷ்குமார். தன்னை ஈன்ற பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் பாசக்கார குழந்தைகள் பெருகி வரும் இந்த சமூகத்தில். சுரேஷ்குமார் கட்டியிருக்கும் இந்த தாய் கோவில்…. ஒவ்வொரு தாய்க்கும் பெருமை சேர்க்கும் என்றால் அது மிகை ஆகாது.
Share: